×

என்னை வெற்றிபெறச் செய்தால் உங்களில் ஒருவனாக இருப்பேன் மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிரவன் பிரசாரம்

மண்ணச்சநல்லூர், ஏப்.3: உங்களில் ஒருவனாய் உங்களோடு ஒருவனாய் இருப்பேன் என்று மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிரவன் பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்யும்போது உறுதியளித்து பேசினார். மண்ணச்சநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிரவன் நேற்று தொகுதிக்கு உட்பட்ட முசிறி மேற்கு, தா.பேட்டை கிழக்கு பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக முதல்வராக பதவியேற்பது உறுதியாகிவிட்டது. நீங்கள் என்னை எம்எல்ஏ வாக வெற்றி பெறச் செய்தால் உங்களது கோரிக்கைகள் அனைத்தையும் முதல்வராக பொறுப்பேற்க உள்ள ஸ்டாலினிடம் கூறி நிறைவேற்றி தருவேன். இந்த பகுதிகளில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துவேன். அரசு பள்ளிகளுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன். இப்பகுதிகளில் உள்ள கிராம கோயில்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நான் என்றும் உங்களில் ஒருவனாய், உங்களோடு ஒருவனாய் இருப்பேன் என்று பேசினார். அப்பகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள் சேகரன், மாசிலாமணி, கிருஷ்ணமூர்த்தி, கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் திரளாக பங்கேற்றனர்.

Tags :
× RELATED மாநகராட்சி நிர்வாகம் முடிவு வீடு,...